top of page
image_edited.jpg
image_edited.jpg
image_edited.jpg
image_edited.jpg
image_edited.jpg
image_edited.jpg
image_edited_edited.jpg
image_edited.jpg
image_edited.jpg

குறள் மலைச் சங்கத்தின் நோக்கம்

        தமிழ் காக்கும், தமிழர் நலன் காக்கும் ஓர் உயரிய தமிழ்ச் சங்கமாக 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த குறள் மலைச் சங்கம்.

        தமிழ் மொழியின் வல்லமையை உலகிற்கு ஓங்கி உணர்த்திய, உலகப் பொது மறையாம் திருக்குறளை கல்வெட்டுக்களில் பொறிக்கவேண்டும் என்பதே இந்த குறள் மலைச் சங்கத்தின் தலையாய நோக்கம்.

     1330 குறள்களுக்கும் கல்வெட்டுக்களை உருவாக்கி, தொடர்ந்து அதை பராமரித்து, அடுத்தடுத்த நமது தலைமுறைகளும், தமிழின் பெருமையை உணரும்படியும், பயன்பெறும்படியும் செய்திடல் வேண்டும்.

        பல லட்சம் ஆண்டுகள் ஏன் பல கோடி ஆண்டுகளானாலும் கல்வெட்டுக்கள் என்பவை என்றும் அழியாமல் நீடித்து நிலைத்து நிற்க்கக்கூடியவை.   ஆகவே தமிழ் அதிசயங்களை கல்வெட்டுக்களாக்கும் முயற்சியில் குறள் மலைச் சங்கம் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

        ”இதுவரை எந்த இலக்கியமும் மலையில் கல்வெட்டுகளில் எழுதப்படவில்லை. திருக்குறளே முதன்முதலாக மலையில் எழுதப்படுகிறது. ஆகவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த இலக்கியத்தை, தமிழ் இலக்கியத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும்” என்பதற்காகவும் குறள் மலைச் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

   ”ஐநாவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் போது, திருக்குறளின் முக்கியக் கருத்துகள் அதில் இடம் பெறச்செய்யவேண்டும்” என்பதையும் தொடர்ந்து ஐநாவில் வலியுறுத்தி வருகிறது குறள் மலைச் சங்கம்.

1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது.

2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும்.

3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 196 நாடுகளிலும் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவன செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திருத்தத்தில், திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம் பெறச் செய்யும் நிலை உருவாக்குவது,

Purpose of the Kural Malai Sangam

The Kural Malai Sangam was started in the year 1999 as a high-level Tamil Sangam for the protection of Tamil and the welfare of Tamils.

The main objective of this Kural Malai Sangam is to engrave in the inscriptions of the world Noble book Thirukural, who made the power of the Tamil language known to the world.

 we need to create and maintain 1330 couplets inscriptions on the rock in India and continue to maintain it so that future generations can feel and benefit from Tamil pride.

Inscriptions can last for millions of years, even billions of years. Therefore, the Kural Malai Sangam has dedicated itself to the task of making Tamil wonders into inscriptions.

1. Inscribing Thirukkural on the Mountain and create “Thirukkural Malai” and declared this place as a International tourist destination.


2. The Thirukkural, which is written in a way that is applicable to the world and the three eras, should be recognized by UNESCO as the World book.


3. As Thirukkural is an educational book, efforts should be made to place Thirukkural in the curriculum in all 196 countries that are members of the United Nations. In the United Nations amendment, the important ideas of Thirukkural should be placed.

bottom of page