1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
- thirukkuralmaamalai
- Feb 2
- 1 min read
Updated: Mar 10
1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு குறள் மலைச் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
பேச்சுப் போட்டியில் முதல் பரிசை ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவியும், இரண்டாம் பரிசு கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவியும், மூன்றாம் பரிசு அரசு கலைக் கல்லூரி ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவரும், ஓவியப் போட்டியில் முதல் பரிசை அரச்சலூர் அரசு கலைக் கல்லூரி மாணவரும், குறும்பட போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணாக்கர்களும், ராசிபுரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர். ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும், நூல்களும் வழங்கப்பட்டன. பரிசு பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
On 1.2.2025, competitions related to Thirukkural were organized at PSGR Krishnammal Women's College, Coimbatore. In addition, a Muthamizh festival was held successfully in which students from more than ten college participated. At the end of the event, prizes were given to the winning students on behalf of the Kural Malai Sangam.
The first prize in the speech competition went to a student from Vellalar Women's College, Erode, the second prize went to a student from Sri Venkateswara College, Gopichettipalayam, the third prize went to a student from Government Arts College, Rasipuram, the first prize in the painting competition went to a student from Government Arts College, Arachalur, and in the short film competition, students from Bharathiar University and students from Government Arts College, Rasipuram won prizes. Cash prizes, certificates and books were awarded. Congratulations to the prize winners.





Comments