top of page
Search

கோபிச்செட்டிபாளையம் பி.கே.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது.

Updated: Feb 25

கோபிச்செட்டிபாளையம் பி.கே.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்றுச் சிறப்பித்த அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது குறள் மலைச் சங்கம்.


திருக்குறள் என்பது பள்ளி மாணாக்கர்களுக்கு மனப்பாடப் பகுதியாக மட்டும் இருந்த காலம் போய் தற்போது கல்லூரி மாணவர்கள் திருக்குறளை ஆராய்ச்சி செய்யும் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார்கள். குறிப்பாக குறள் மலையைப் பார்வையிட்ட பி.கே.ஆர் கல்லூரி மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் திருக்குறள் கதைகளையும் திருக்குறள் கட்டுரைகளையும் சமர்ப்பித்து, பல்வேறு பரிசுகளையும் வென்று சென்றார்கள். பாரதப் பிரதமரின் உலகப் பயணத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் திருக்குறளை மேற்கோள்காட்டி, அவர் பேசியது தான், ஒவ்வொரு கல்லூரி மாணவருக்குள்ளும் திருக்குறள் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தது என்று பெரும்பாலான மாணவிகள் குறிப்பிட்டனர்.


குறள் மலையில் பல்வேறு விதமான திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. திருக்குறள் கல்வெட்டை பார்வையிடும் ஏற்பாடுகளை கோவிலின் தலைமை குருக்கள் திரு பழனிச்சாமி அவர்கள் (வயது 89) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். காரைக்குடி நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு ஆர்.சந்திரமோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைச் சிறப்பித்தார், கருத்தரங்கைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி பாராட்டுகிறது குறள் மலைச் சங்கம்.




 
 
 

Comments


bottom of page